கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்விச் செலவை அரசே ஏற்கும்….முதல்வர் அதிரடி உத்தரவு!
நாட்டில் தினசரி கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என அதிரடியாக தெரிவித்தார். மேலும் கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் முதியவர்களுக்கும் அரசு நிதியுதவி அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.