ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட தீபக் சோப்ரா!

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிராக இந்த இரண்டு தடுப்பூசிகளே பயன்பாட்டில் இருந்து வந்தன.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக இந்தியாவில் அனுமதிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது.
அதற்கான ஒப்புதல்களும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்பட்டது.
தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த ஸ்புட்னிக் தடுப்பூசியை கஷ்டம் ஃபார்மா சர்வீசஸ் தலைவர் தீபக் சோப்ரா செலுத்திக் கொண்டார். ஐதராபாத்தில் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் இந்த தடுப்பூசிக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் ஒரு டோசின் விலை 995 ரூபாய் மற்றும் 40 பைசாவகும். இந்த மருந்தை இந்தியாவில் விரைவில் உற்பத்தி செய்ய உள்ள டாக்டர் ரெட்டி லெபாரட்ரீஸ் இதனை உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் இந்த மருந்தை தயாரிக்கும் போது இதன் விலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.