தடுப்பூசி செலுத்திக் கொண்ட சேப்பாக்கம் எல்.எல்.ஏ

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.
மேலும், தமிழகத்தில் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையைத் தடுக்க நம் கைவசம் இருப்பது தடுப்பூசி மட்டும் தான். இதனால், தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சேப்பாக்கம் தொகுதி எல்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “கொரோனா தடுப்பின் முக்கிய ஆயுதம் தடுப்பூசி. முதல் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று போட்டுக்கோண்டேன்.
கொரோனாவை வெல்ல தடுப்பூசி மட்டுமே நம் முன்னிருக்கும் ஒரே வாய்ப்பு. எனவே, பொதுமக்கள் அனைவரும் தயங்காமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள்.நன்றி” என்று தெரிவித்துள்ளார்.