முதல்வர் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை ஒரு கோடி நிதி

தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா பரவலின் கோரத் தாண்டவத்தைக் குறைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், கொரோனாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களுக்காக பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நிவாரணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து, பலரும் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். முதல்வரின் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அதன் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.