நிவாரணம் வழங்க ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தில், கொரோனாபரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொரோனா நிவாரண பணிகளுக்காக விருப்பமுள்ளவர்கள் நன்கொடை அளிக்க வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் அவர்களும் முதல்வரின் கோரிக்கையை ஏற்று நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்ல நோக்கத்திற்காக வசதி படைத்தவர்களும், மனம் படைத்தவர்களும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.