ஆக்சிஜன் விற்பனையிலும் பகல் கொள்ளை… காணாமல் போன மனிதநேயம்!
நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பெருந்தோற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், ஆக்சிஜன் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கள்ளச்சந்தையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விற்கப்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்ககு நுரையீரல் பாதிக்கப்படுகிறது. அதனால் ஆக்ஸிஜன் சிலிண்டரின் தேவை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை அதிகரித்துள்ளது.
சென்னையில் பல இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் நான்கு மடங்கு விலை கூடுதலாக விற்கப்படுகிறது.
இதனால் உண்மையில் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுவோர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
ஆக்சிஜன் சிலிண்டர் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.