நாங்க கொரோனோவ சமாளிப்போமா இல்ல இவங்கள சமாளிப்போமா…. கதறும் இளம்பெண்!

நாட்டில் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதற்கு தினசரி பலரும் பலியாகி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளது. ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழக்கும் அவல நிலையே நீடித்து வருகிறது.

கொரோனா ஒருபுறம் மக்களை பாடு படுத்தும் நிலையில் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் சிலரின் செயல்பாடுகள் மனதை வேதனை அடையச் செய்கிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் ஒரு இளம்பெண். அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் இந்த இளம்பெண்ணின் இடுப்பை கிள்ளி உள்ளார்.

அதிர்ச்சியடைந்த இளம்பெண் திரும்பிப் பார்க்கையில் அவரது துப்பட்டாவும் இழுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த இளம்பெண்கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

மருத்துவமனைகளில் ஒரு சில ஊழியர்கள் இது போன்று தரக்குறைவான செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் மத்தியில் அச்சமும், அதிருப்தியும் உண்டாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *