ஊரடங்கால் கொரோனா பரவல் விகிதம் குறைகிறது! ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு ஒன்றே வழி என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஊரடங்கை அமல்படுத்திய மற்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஊரடங்கை நடைமுறைப்படுத்தி இரண்டு நாட்கள் ஆன நிலையில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் படிப்படியாக உயர்ந்து வந்த கொரோனா பரவல் விகிதம், கடந்த சில நாட்களாக முழு ஊரடங்குக்கு பிறகு பரவல் விகிதம் குறைந்துள்ளது.
மக்களுக்கு எந்தவித பாதிப்பு இன்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றோம். இந்த 2வது அலையில் இளைஞர்கள் பலரும் அறிகுறிகள் தென்பட்டதும் உடனடியாக வந்து பரிசோதனை மேற்கொள்கின்றனர். இந்த விழிப்புணர்வை தான் சுகாதாரத்துறை செய்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை” என்று தெரிவித்துள்ளார்