முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் மறைவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் முன்னாள் தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை இறந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த பாண்டூர் கிராமத்தில் இன்று மாலை உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றி பல ஊடக விவாதங்களில் பங்கேற்று வந்தவர்  ராஜீவ் காந்தி கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *