கேரளாவில் சுவாரஸ்யமான திருட்டு சம்பவம்…. மனைவியைப் பார்க்க இப்படியும் பண்ணலாமா?

கேரளாவில் ஒருவர் அவரது மனைவியைப் பார்ப்பதற்காக பேருந்தினை திருடி 200 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற சுவாரஸ்யமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரளா மாநிலம் பதனாம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியைச் சேர்ந்தவர் தினூப் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோழிக்கூட்டில் இருந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க திருவல்லாவுக்கு செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது ஊரடங்கின் காரணமாக பேருந்துகள் இல்லாமல் இருந்துள்ளது.

அப்போது பெட்ரோல் முழுதும் நிரப்பப்பட்ட தனியார் பேருந்து ஒன்றினை திருடி ஓட்டிச் சென்றுள்ளார்.

காவல்துறை அவரை நிறுத்தி கேட்டபோது, புலம்பெயர் தொழிலாளர்களை அழைக்கப் போவதாக பொய் கூறியுள்ளார்.

இதனால் காவல் துறையினரும் அவரை செல்ல அனுமதித்தனர்.

ஆனால் 2-வது முறையாக காவல்துறையினர் விசாரிக்கும்போது தினூப் மாட்டிக்கொண்டார்.

இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *