என்னோட மனைவிக்கே படுக்கை வசதி இல்லை…கொந்தளிக்கும் பாஜக எம்எல்ஏ!

உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் படுக்கை இல்லாமல் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ராம்கோபால் லோதி தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டுவந்துள்ளார்.

ஆனால் அவருக்கு மூன்று மணி நேரம் காத்திருந்தும் படுக்கை வசதி கிடைக்கவில்லை.

இதனையடுத்து கோபமடைந்த எம்எல்ஏ ஒரு எம்எல்ஏ-வுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன ஆவது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *