மின் கட்டணத்தை ரத்து செய்ய சீமான் கோரிக்கை!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மின் கட்டணங்களை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்க மின் கட்டணம் செலுத்த மே 31 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.