சற்று குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில், கொரோனா இரண்டாம் தொற்றின் அலை வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக நான்கு லட்சத்தைக் கடந்திருந்த கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,29,942 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 37,15,221 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து 1,90,27,304 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிே நேரத்தில் கரோனாவிலிருந்து 3,56,082 பேர் குணமடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,876 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,49,992 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 17,27,10,066 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 30,56,00,187 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 18,50,110 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.