தெலுங்கானாவிலும் வருகிறது முழு ஊரடங்கு!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தந்த மாநிலங்களில் நிலவும் தொற்று பரவலுக்கு ஏற்ப தனித்தனியாக கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தெலுங்கானாவிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *