காத்திருப்பிலேயே போகும் உயிர்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி உரிய நேரத்தில் கிடைக்காததால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவமனையில் மொத்தம் 252 படுக்கைகள் உள்ளன.

ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது. இந்த தாமதத்தால் தான் தற்போது 3 பேர் இறந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *