கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் – சீமான்

தமிழகத்தில் கொரோனா  பரவலை கட்டுபடுத்த அரசு சித்த மருத்துவத்தையும் பயன்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது,
“தமிழகத்தில் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக அமைக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருப்பது நம்பிக்கையைத் தருகிறது. கொரோனா நோயாளிகளுக்குச் சென்னையில் கிடைக்கும் வசதிகளும், வாய்ப்புகளும் தமிழகத்தின் கடைக்கோடிவரை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும். அதற்குப் பேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகத்தை ஐந்து சுகாதார மண்டலங்களாகப் பகுத்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு சுகாதாரச் செயலாளரை நியமிக்க வேண்டும். அதன்மூலம், நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளும், நோயாளிகளுக்குரிய சிகிச்சை முறைகளும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவலாகக் கிடைக்கப் பெறவும், சுகாதார வசதிக் குறைபாடுகள் இல்லாத நிலையை அடையவும் உரிய ஏற்பாடுகளையும், வழிவகைகளையும் செய்யலாம்.
மேலும், கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவத்தோடு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறேன். சமீபத்தில் தமிழகத்தின் மிக முக்கிய ஆளுமைகள் இம்மருத்துவ முறை மூலம் கொரானாவிலிருந்து மீண்டனர் என்று அறியும் பொழுது அதை அரசு கவனத்தில் எடுத்து தமிழகம் முழுவதும் இருக்கும் சித்த மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து உடனடியாக ஒருங்கிணைந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…