மனைவியுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிரிக்கெட் வீரர்

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க தற்போது கைவசம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி தான்.

இதனால், 18 வயதை நிரம்பியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடி நிலவுவதால் அனைவருக்கும் குறித்த நேரத்தில் தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய அணி வீரர் புஜாரா தனது மனைவி பூஜாவுடன் சென்று கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை போட்டுக் கொண்டுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், வாய்ப்புள்ள அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *