சிங்கப்பூரில் இருந்து கப்பலில் வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காட்டுத்தீயாப் பரவி வருகிறது. குறிப்பாக வட ம்ந்நிலங்களில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் தொற்று பரவும் வேகத்தைப் பார்த்த சர்வதேச நாடுகள் பாதிப்பிலிருந்து மீள உதவிகரம் நீட்டியது. அமெரிக்காவும் பல கொரோனா உபகரணங்களை விமானம் மூலம் அனுப்பி வைத்தது.

இதனைத்தொடர்ந்து கடந்த 5ம் தேதி சிங்கப்பூரின் சங்கி கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ் ஐராவத் கப்பல், 8 ISO க்ரையோஜெனிக் ஆக்சிஜன் களன்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களுடன், இன்று விசாகப்பட்டினம் கப்பற்படை தளத்தை வந்தடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *