ஒழுங்கா இருங்க இல்லனா பதவியிலிருந்து தூக்கிடுவேன்… மு.க ஸ்டாலின் அதிரடி!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து அதற்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. அதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7-ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்தே மு.க.ஸ்டாலின் பல அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

தனது முதல் கையெழுத்தை தேர்தலில் கொடுத்த 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு கையெழுத்திட்டார்.

மேலும் கொரோனா தடுப்பு பணிகளை சரிவர செய்வதற்காக முழு ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

அப்போது அவர் அமைச்சர்கள் அனைவரும் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையாகவும் தங்களது பணிகளை செய்ய வேண்டும்எனக் கூறினார். மேலும் திமுக 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சிக்கு வந்துள்ளதால் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செயலை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

பலருக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் திமுகவில் இருக்கின்றனர் ஆனால் உங்களுக்கு அது கிடைத்துள்ளது. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு நன்மை செய்யுங்கள். இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *