கங்கை நதியில் மிதக்கும் கொரோனா சடலங்கள்… உத்தரபிரதேசம் வீசியதா என சந்தேகம்?
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதுவரை நாட்டில் மொத்தமாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் தினசரி கொரோனா பாதிப்பானது குறைந்தபாடில்லை.
கொரோனாவால் இறப்பவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இறப்பவர்களுக்கு மயானத்தில் இடமில்லாமல் தூக்கி வீசப்படும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது உத்தரபிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.
கங்கை நதியில் இன்று காலை 40-க்கும் மேற்பட்ட கொரோனா சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கியதே அதற்குக் காரணம்.
இந்த சடலங்கள் உத்தரபிரதேச அரசால் கங்கையில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதற்குக் காரணம் கடந்த சில தினங்களாகவே உத்தரபிரதேச அரசு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் கங்கையில் இன்று சடலங்கள் மிதந்து ஒதுங்கியுள்ளது அந்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.