இவர்களுக்கு தடை விதிக்காதீர்கள்…மாநகராட்சி ஆணையர் உத்தரவு

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஊரடங்கு நேரத்தில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க யாரேனும் வெளியில் வந்தால் அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை மீறி யாரேனும் உணவு அளிப்பவர்களைத் தடுத்தால் அவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தமுறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது போது தெருநாய்களுக்கு உணவளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் பல நாய்கள் உணவின்றி இறந்தன.

இந்நிலையில் இந்தப் புதிய உத்தரவு மாநகராட்சி ஆணையரால் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *