வாட்ஸ் அப்பில் மெசேஜ் பண்ணுங்க… 2 மணிநேரத்தில் மருந்து வீடு தேடி வரும்
9342066888 எண்ணிற்கு வாட்ஸ் தகவல் அனுப்பினால் மருந்துகள் உடனடியாக வீடுதேடி வரும்
9342066888 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பினால் 2 மணி நேரத்தில் வீட்டிற்கே வந்து மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மருந்துகள் தேவைப்படுவோர் 9342066888 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மருத்து சீட்டுடன் முகவரியை அனுப்பிவைக்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை தேவைப்படுவோருக்கு செல்போனில் இலவச ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர், கொரோனா நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு 50% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்குவதாகவும் மற்றவர்களுக்கு உற்பத்தி விலையிலேயே மருந்துகள் வழங்கப்படும் என்றும் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருந்து விநியோகிக்கும் பணியில் மாநிலம் முழுவதும் 2 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். 40,000 மொத்த மருந்து விற்பனையாளர்கள் இணைந்து இந்த சேவையைத் தொடங்கியுள்ளனர்.