பிணங்களிடமிருந்து துணிகளை திருடும் மர்ம கும்பல்… அதிரடியாக கைது செய்த காவலர்கள்!
உத்தரபிரதேச மாநிலம் பகாபத்தில் வினோதமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இறந்தவர்களின் பிணங்களை தோண்டி எடுத்து துணிகளை திருடி விற்று வந்துள்ளது ஒரு மர்ம கும்பல்.
இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் பரவியது.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த மர்ம கும்பல் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிணங்களை புதைத்ததும் இவர்கள் சென்று அதை தோண்டி எடுப்பார்கள். உடலில் போர்த்தப்பட்ட புது துணிகள், சேலைகள், ஆடைகளை எடுத்து சென்று விடுவார்கள்.
பின்னர் அதனை நன்றாக துவைத்து சலவை செய்து புதுத்துணி போன்று விற்று விடுவார்கள்.
இவ்வாறு இவர்கள் தோண்டி எடுக்கும் பிணங்களில் கொரோனா நோயாளிகளும் தோண்டி எடுக்கப் படுகின்றனர் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அவ்வாறு இவர்கள் துணிகளை விற்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனையடுத்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் அந்த மர்ம கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.