கோவை மாவட்டத்தில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. அதில் கோவையும் ஒன்று.

இதுவரை கோவையில் 95 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கோவையில் 2509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கோவையில் 759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது 11,731 பேர் கொரோனா பாதிப்புடன் கிசிச்சை பெற்று வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *