இப்படி நடந்துக்குறவங்க இருக்கிற வரைக்கும்… பெத்தவங்களுக்கு நிம்மதியே இல்ல!
கடலூர் மாவட்டத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கிளிமங்கலத்தைச் சேர்ந்த 30 வயது கூலித் தொழிலாளிக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது. குழந்தை அவரது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது கிளிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டுசாமி மகன் ஜோதிவேல் என்பவர் அவ்வழியாக வந்துள்ளார்.
அப்போது குழந்தை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததை அறிந்த ஜோதிவேல், குழந்தையை அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.இது குறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜோதிவேல் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்