ஊரடங்கைப் பயன்படுத்தி நடக்கும் அநியாயம்… அபராதம் விதிக்கும் அதிகாரிகள்!

தமிழக அரசு  மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதனையடுத்து நேற்று மற்றும் இன்று அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படலாம் என தமிழக அரசு  அறிவித்துள்ளது. மேலும் பேருந்துகளும் இந்த இரண்டு நாட்களில் தடையின்றி செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவோர் பேருந்து நிலையங்களில் அலை மோதி வருகின்றனர். அரசு பேருந்துகள் தவிர ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ஆம்னி பேருந்துகளில் அரசு பேருந்தை விட கட்டணம் மிகவும் அதிகமாக வசூலிக்கப் படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுபோன்ற ஒரு சம்பவம் சென்னை பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூல் செய்த ஆம்னி பேருந்து ஒன்றை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூல் செய்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *