கொல்கத்தா வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஐபிஎல் 14-வது சீசன் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் கடுமையான கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றிய போதும் அவர்களை கொரோனா விட்டுவைக்கவில்லை.

ஐபிஎல் இல் பங்கேற்கும் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் விருத்திமான் சாஹா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இவ்வாறு வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதையடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *