கொரோனாவால் பலியான கிரிக்கெட் வீரர்!

கொரோனா பரவல் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இன்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சி டிராபி வீரர் விவேக் யாதவ் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ராஜஸ்தானின் ரஞ்சி அணி வீரரும், அன்பான நண்பருமான விவேக் யாதவ் தற்போது நம்மோடு இல்லை உருக்காமாக பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *