முழு ஊரடங்கு மட்டும் தான் தீர்வு! மருத்துவ சங்கங்கள் கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மக்களை பாதுகாக்கும் வழி முறைகளில் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்தது. இன்று முதல் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளும் அமலுக்கு வருகிறது.
அதன்படி, காலை 6 மணி முதல் 12 மணி வரை தான் அனைத்து கடைகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மருத்துவர் குழு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஊரடங்கு ஒன்று தான் தீர்வு என தெரிவித்துள்ளனர்.
மேலும், முழு ஊரடங்கை அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.