எனக்கு பாதுகாப்பு வேண்டும்! சீரம் நிறுவன தலைவர் வேண்டுகோள்

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதன் வேலையைக் காட்டி வருகிறது. இந்தியாவிலும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைக்க தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், கோவிஷீல்டு தடுப்பூசியை மகாராஷ்ராவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலா உள்ளார். தற்போது, தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பல்வேறு குழுக்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *