இனி 50% இருக்கைகள் தான்! போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் பரவலைக் கட்டுப்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் கீழ் தமிழக முழுவதும் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
ஆனாலும், தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
நாளை முதல் மாநகர போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள் என மாநகர போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது. மேலும், பயணிகள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.