கொள்ளையடிக்கப்படும் ரெம்டெவிசர் மருந்துகள்

தமிழகத்தில், தற்போது கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவர்கள் முதலில் ரெம்டெவிசர் மருந்துகளைத் தான் பரிந்துரைக்கின்றனர்.
இதனால், ரெம்டெவிசர் மருத்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு பலர் கள்ளச்சந்தையில் ரெம்டெவிசர் மருந்துகளை அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மருந்து சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.