ஜூலை வரைக்கும் தடுப்பூசி இல்லையாம்!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசி வருகிறது. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 4 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி தயாரிப்பினை 60-70 மில்லியனிலிருந்து 100 மில்லியனாக உயர்த்தவில்லையென்றால் வருகிற ஜீலை மாதத்துக்குள் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படும் என சீரம் தடுப்பூசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதையடுத்து தடுப்பூசி தயாரிக்கும் பணியை சீரம் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.