சில மாநிலங்களில் தொடங்கப்படாத தடுப்பூசி பணிகள்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அதனால், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக, ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் கோவின் தளம் அல்லது ஆரோக்கிய சேது செயலியில் முன் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாடு முழுவதும், நேற்று காலை வரையில் 2.45 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால், தமிழகம், கர்நாடகம், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தினால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவில்லை என கூறப்பட்டுள்ளது.