தடுப்பூசித் திட்டதை செயல்படுத்த முடியாது? மாநகராட்சி ஆணையர்!
கொரோனா பரவலின் இரண்டாவது அலை தமிழகத்தில் மிகவும் தீவிரமாக வீசி வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவித்து செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் 18 நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற மே 1 ஆம் தேதி முதல் தகுதியுடைய அனைவரும் தங்களது பெயரை பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப் பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சென்னை மாநாகராட்சி ஆணையர் பிரகாஷ் நாளை திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த முடியாது என அறிவித்துள்ளார். தேவையான தடுப்பூசி வரததால் இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.