மீண்டும் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தும் மோடி

தமிழகத்தில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. தினசரி பாதிப்பு நான்கு லட்சங்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

உயிரிழப்பும் 3000 த்தைக் கடந்து சென்று வருகிறது. இந்தியாவிற்கு உதவ உலக நாடுகளும் தாமாக முன்வந்துள்ளது. இந்நிலையில், தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இன்று மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருகின்ற 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியானது துவங்கப்பட உள்ளது. அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்தும் பிரதமர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *