கொரோனாவால் தலைமைச் செயலர் மரணம்!

கொரோனா பரவல் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்தும் பணியும் விரைவுப் படுத்தப் பட்டுள்ளன.
கொரோனாவால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது பீகார் மாநில தலைமைச் செயலர் அருண்குமார் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.