ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய மனிதநேயம் மிக்க ஓட்டுநர்!

கொரோனா பரவல் உலக நாடுகளைப் புரட்டிப் போட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக வீசி வருகிறது.

நாட்டின் பல இடங்களிலும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு தற்போது அந்த நிலை மாறி வருகிறது. ஆக்ஸிஜன் மட்டுமில்லமால் கொரோனாவால் பாதிக்கப்படுவோரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல போதுமான அளவில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருப்பதில்லை.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜாவத் கான் தனது ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். இது குறித்து பேசிய ஜாவத் கான் தனது மனைவியின் நகைகளை விற்றுதான் ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளதாகக் கூறினார். மேலும் ஜாவத் கான் ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் பலரும் உயிரிழப்பதை தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் பார்த்து இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளார்.

இதுவரை தனது ஆட்டோவில் 9-க்கும் மேற்பட்டோரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார். மேலும் ஆம்புலன்ஸ் உதவி தேவைப்படுவோர் தனது கைப்பேசிக்கு எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…