இந்தியாவிற்கு உதவ அமெரிக்காவிலிருந்து வந்த விமானம்!

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவது, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தியாவிற்கு உதவ பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டியது.
அதன்படி, நூற்றுக்கணக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஒரு லட்சம் முகக் கவசங்கள், ரேபிட் ஆன்டிஜென் கிட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் அமெரிக்காவின் முதல் ராணுவ விமானம் இன்று புதுடெல்லி வந்து சேர்ந்தது.
இதனையடுத்து, மேலும் இரண்டு விமானங்களும் நிவாரணப் பொருட்களுடன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமெரிக்கா சார்பில் கரோனா நிவாரணப் பொருட்களுடன் ராணுவ விமானம் இந்தியா வந்து சேர்ந்துள்ளது. 70 ஆண்டுகள் நட்புறவுடன் இந்தியாவுடன் இருக்கும்அமெரிக்கா, இந்த இக்கட்டான நேரத்தில் துணை நிற்கும். கரோனா வைரஸுக்கு எதிரானப் போரை கூட்டாக எதிர்கொள்வோம்”