திருமண ஊர்வலத்தில் பாதுகாப்பு கவச உடையுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் நடனம்… வைரலாகும் வீடியோ!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 3 லட்சத்துக்கும் அதிகமாக தினசரி கொரோனா தொற்றுகள் பதிவாகி வருகின்றன. இந்த கடினமான சூழலிலும் முன்களப் பணியாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னலமின்றி செயல்பட்டு வருகின்றனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர். இதில் பலரும் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறைந்து மன அழுத்தத்திலும் உள்ளனர். ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரியும் மகேஷ் என்பவர் செய்துள்ள செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுசீலா திவாரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுடியும் இவர் ஆம்புலன்ஸ் ஓட்டிச் செல்லும் போது திருமண ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. அதில் மகேஷ் கொரோனா பாதுகாப்பு கவச உடையுடன் நடனமாடியுள்ளார். அவரது இந்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினசரி அதிகரித்து வரும் கொரோனாவால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலையில் தினசரி கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும் இந்த டிரைவரின் நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *