ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா உறுதி!
இந்தியாவில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தொற்று பாதிப்பின் வேகம் அதிகமாக உள்ளது.
கொரோனா தடுப்புப் பணிகளில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இது குறித்து, தனது ட்விட்டர் பக்கதில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளேன். மேலும், அறிகுறிகள் எதுவும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.