40 வயது இளைஞருக்காக உயிர்துறந்த 85 வயது முதியவர்!

மருத்துவமனையில் இடம் கிடைப்பதற்காக, 85 வயது முதியவர் ஒருவர் தனது படுக்கையை விட்டுக்கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. 

மஹராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரைச் சேர்ந்தவர் தபல்கர். இவர் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க உறுப்பினராக உள்ளார். 85 வயதான இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய 40 வயதான கணவரை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டி கெஞ்சி கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட தபல்கர், அங்குள்ள மருத்துவர்களிடம்,  ‘எனக்கு வயது 85. நான் என் வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். ஒரு இளைஞனின் உயிரை காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது. அவர்கள் குழந்தைகள் இளமையாக இருக்கிறார்கள். தயவு செய்து என் படுக்கையை அவர்களுக்கு கொடுங்கள்.’ என மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் முதியவரின் உறுதியான நிலைபாட்டால் அவரது இடத்தை அந்த இளைஞருக்கு கொடுத்தனர். இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற தபல்கர்,  மூன்று நாட்களில் இறந்து விட்டார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவப்பட்டதைத் தொடர்ந்து வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *