கொரோனா சிகிச்சையைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

தமிழகத்தில், கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நாள்தோறும் பாதிப்பின் வேகமும் அதிகமாக இருக்கிறது.
சென்னை மாநகராட்சியில், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை கண்காணிக்க, சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி தரேஸ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான, அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.