கொரோனா தொற்றினால் மறைந்த இயக்குநர்!
2010 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கர் தயாரிப்பில் ’ரெட்டைச் சுழி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தாமிரா என்ற காதர் முகைதீன். தனது முதல் படத்திலேயே பாரதிராஜா, பாலசந்தர் என்ற இரண்டு இயக்குநர்களை சேர்த்து நடிக்க வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, ஆனால், இந்தப் படம் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.
அதன் பின் அவர் படங்களை அவ்வளவாக இயக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து, சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோரது நடிப்பில் ஆண் தேவைதை என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படமும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.
பின், தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வந்த அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் இருக்கும் மாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை தாமிரா இறந்துவிட்டதாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.