தொடர்ந்து 4 ஆவது நாளாக மூன்று லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து, 4 ஆவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருபது மக்களிடம் அச்சத்தை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 3,52,991 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பு 1,73,13,163 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 2812 பேர் இறந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,95,123 ஆக உயர்ந்துள்ளது.