தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை போடுங்கள் – மத்திய அரசு!

கொரோனா பரவல் நாட்டில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பரவல் 3 லட்சத்துகும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் மக்கள் கொரோனா விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருகின்றனர். இரவு நேரங்களிலும் அவசியமில்லாமல் வெளியில் திரிகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் நிதி ஆயோக் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் மாநில அரசுகள் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம் என கூறியுள்ளது. இதன்மூலம் அவசியமின்றி வெளியில் மக்கள் நடமாடுவதை தடுக்க முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.