கொரோனாவின் புதிய கட்டுப்பாடுகளால் கோவில் திருமணங்களுக்கும் கட்டுப்பாடு

தமிழகத்தில், கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல புதிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறது.

அதன்படி, இன்று முதல் கோயில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்று முதலே கோயில்களிலும் நடைபெறும் திருமணங்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் நடைபெறும் மணமக்களுடன் 10 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதால், உடன் வந்த உறவினர்கள் கவலையடைந்தனர். மணமக்களின் பெற்றோர்கள் சென்றாலே 6 பேர் வந்து விடுவதால், யாரை கூட்டிச் செல்வது என்ற குழப்பம் நிழவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், திருமணங்களுக்கு 50 பேரை அனுமதிக்க வேண்டும், குறைந்தபட்சம் 25 பேரையாவது அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *