தேர்தல் ஆணையத்தை கடுமையாக தாக்கும் சென்னை உயர்நீதிமன்றம்!

தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை’ என்று கடுமையைகத் தாக்கி பேசியுள்ளது. மேலும்,
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லாவிட்டால், வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, வாக்குப்பதிவு நாளன்று கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனால் கோபமடைந்த சென்னை உயர்நீதி்மன்றம் தேர்தல் பிரச்சாரம் நடக்கும் போது வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? என கடுமையாக சாடியுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவக் காரணம் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொரோனா விதிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்றாததே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் சாட்டினாலும் தகும் எனவும் உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *