இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீட்டும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்!

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பரவல் 3 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

நாட்டின் பல மாநிலங்களும் கொரோனா பரவலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் பிரதமரின் பாதுகாப்பு நிதிக்கு ரூ.37 லட்சம் வழங்கியுள்ளார்.

இவரது இந்த மனிதநேயம் மிக்க செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கொரோனா இந்தியாவில் அதி தீவிரமாக பரவி வருவதால் இந்தியாவிற்கு உலகின் பல நாடுகளும் உதவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *