கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தை விட வேண்டும் – ராதா கிருஷ்ணன்

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசும் பல பாதுகாப்பு நெறிமுறைகளை வெளிப்படுத்தி வருகிறது.
சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், “அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கூடுதலாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா கவனிப்பு மையங்களில் 9,503 படுக்கைகளும், கொரோனா கவனிப்பு மையங்களில் 9,503 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. எனவே, மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.
அரசு மருத்துவமனைகளில் உள்ள வரம்பை தாண்டாமல் இருக்க பொதுமக்கள் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். செவிலியர்கள், மருத்துவர்கள் கூடுதல் பணிசுமையுடன் பணியாற்றி வருகின்றனர்.
போலீசார், சுகாதாரத்துறையினர், துப்புரவு பணியாளர்களும் அதிக சுமையுடன் பலமணிநேரம் பணியாற்றுகின்றன. லேசான அறிகுறிகள் பாதிப்புள்ள நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் முற்றுகையிடுவதை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.